ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், மதுபோதையில் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த கணவன் தங்கராஜை, அவரது மனைவி அமுதா அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர், கணவனின் ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய அமுதா, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் ஏற்பட்ட தகராறே இக்கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.




