பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வங்காளதேச அணி லிட்டன் தாஸின் அதிரடி சதத்தின் (128 ரன்கள்) உதவியுடன் 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ள நிலையில், நாளை இரண்டாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.




