ரேஷன் கடைகளில் எடைகுறைவு, தரக்குறைவு, கலப்படம், கடத்தல் ஆகியவற்றை தடுத்து, நியாயமான எடையில், தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில், அரிசி தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட்டுகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, உணவுப்பொருள் வழங்கல் துறையில் ஆய்வு நடத்தி விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆணையிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




