பட்டுப்புடவை தெரியும்.. பட்டுபுழுவை பற்றி தெரியுமா..??

Oplus_131072

 

பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்களை இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது.

புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது.

தொல்பொருள் ஆராய்ச்சிப்படி கி.மு வாக்கில் பட்டு தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கணிக்கப்பட்டாலும், கன்பூசியஸ் குறிப்பின்படி சுமார் 2700 கி.மு.விலே கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிருக்கிறது.1977ல் நான்சின் நகரில் கண்டெடுக்கப்பட்ட பட்டுப்புழு வடிவம் கொண்ட 5400-5500 ஆண்டுகள் பழமையான செராமிக் கல்லே மிகப்பழமையான பட்டு வளர்பிற்கான ஆதாரமாகும்.*

*140 கி.பி வாக்கில் இந்தியாவில் பட்டுதயாரிப்பு முறை அறிமுகமானது. பட்டு உற்பத்திக்கான நிலைகள் பின்வருவன:*

*பட்டுப்பூச்சி ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகிறது.*

*பட்டுப்பூச்சியின் முட்டையிலிருந்து கம்பளிப்புழு இனமான குடம்பி என்ற பட்டுப்புழுக்கள் உருவாகின்றன.*

*பட்டுப்புழுக்களுக்கு முசுக்கொட்டை இலைகள் உண்ண வழங்கப்படுகிறது.*

*பலமுறை உருமாறும் புழுவானது பட்டு இழைகளைக் கொண்டே கூட்டை உருவாக்குகிறது.*

*முன்னும் பின்னும் தனது எச்சில் கொண்டு பட்டு இழைகளை ஒட்டி வலையை உருக்குகிறது.*

*காற்று பட்டு எச்சியானது காய்ந்து பட்டாக உருமாறுகிறது.*

*சராசரியாக ஒரு புழுவானது ஒரு மைல் நீளத்திற்கு இழைகளை இரண்டு மூன்று நாட்களில் தனது கூட்டில் உருவாக்குகிறது. மிகக் குறைந்த அளவே பயன்படுத்தத்தக்க பட்டானது ஒரு கூட்டிலிருந்து கிடைக்கிறது. எனவே 2500 பட்டுப்புழுக்கள் சேர்ந்தால் தான் ஒரு பவுண்ட் பட்டு உருவாக்க முடியும்.*

*ஒட்டியிருக்கும் கூடுகளைச் சுடுநீரில் இட்டு புழுக்கள் கொள்ளப்படுகின்றன.*

*சேதமாகாத வெளிப்புற கூட்டைத் தேய்ப்பதன் மூலம் இழையின் ஒருமுனை அறியப்படுகிறது.*

*பின்னர் அந்த முனை கொண்டு பட்டு இழை சுற்றப்படுகிறது. ஒரு கூடானது சுமார் 1000 யார்ட் நீளப் பட்டு இழைகளைக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பக்குவப்படாத பட்டு எனப்படுகிறது.*

*நாம் உடுத்தும் பட்டு துணிகள் இந்த பட்டு இழைகளை கொண்டு தான் நெய்யப்படுகிறது.

Read Previous

இந்த லிஸ்டல இருக்கற மாதிரி சாப்பிடுங்க.. 7 நாள்ல ஈஸியா 7 கிலோ எடை குறைக்கலாம்..!!

Read Next

மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular