நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமான அவரது மறைவு செய்தி பெரும் துயரத்தைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சியின் மாநிலச் செயலாளர், அன்னாரை பிரிந்து வாடும் அஜித், ஷாலினி மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.




