பொங்கல் ரொக்கத்தொகை ரூ.3,000 வழங்கும் போது, ரேஷன் கடை பணியாளர்கள் நோட்டுகளை கவர்களில் மறைமுகமாக தரக்கூடாது; பயனாளிகள் முன்னிலையில் எண்ணி கைகளிலேயே வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கைரேகை பதிவு கட்டாயம்; தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் கையெழுத்து பெறலாம். பரிசு பெற வேண்டிய தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்களை அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என கூறியுள்ளது.




