சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை (ஜூன்.09) மாலை 5 மணிக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இப் படை அவரது நேரடி கண்காணிப்பில் செயல்படும். பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை உடனுக்குடன் தடுத்து நடவடிக்கை எடுக்கவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.




