பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் இடைத்தேர்தல் முடியும் வரை அமைச்சர்கள் சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என முதல்வர் ஜோசப் விஜய் தடை விதித்துள்ளார். மக்கள் பணியில் தீவிரம் காட்டுவதோடு, எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல் கூடுதல் கவனத்துடன் பணியாற்றவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அண்மையில் அமைச்சர்கள் கீர்த்தனா, ஸ்ரீநாத், தமிழன் பார்த்திபனின் பிரஸ்மீட் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சனத்திற்குள்ளான நிலையில் இந்நடவடிக்கை பாய்ந்துள்ளது.




