கவுனி அரிசி பொடி செய்வது எப்படி..??

Oplus_131072

 

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 50 கிராம் அளவு கருப்பு கவுனி அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் அரிசியை நன்கு வறுக்க வேண்டும். அரிசியிலிருந்து வாசனை வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து மற்றொரு பாத்திரத்திற்கு அரிசியை மாற்றிக் கொள்ளலாம்.

அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வறுத்த இந்த பொருட்களையும் அரிசியுடன் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் மூன்று பல் வெள்ளை பூண்டுவை தட்டி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வதக்கிய பூண்டையும் அரிசியுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் அனைத்தும் சூடு ஆறும் வரை காத்திருக்கவும். அதன் பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி கல்லுப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது சுவையான கருப்பு கவுனி அரிசி பொடி தயார். இதை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் கலந்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். மேலும் இதை இட்லியுடன் மற்றும் தோசையுடன் நல்லெண்ணெய் சேர்த்தும் சாப்பிடலாம். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கருப்பு கவுனி கலவை சாதமாகவும் செய்து கொடுக்கலாம்.

Read Previous

உங்கள் நாக்கை நீட்டி வலதுபுறமாக பின் இடதுபுறமாக 10 முறை நகர்த்தவும்..!! இதனால் நடக்கும் அதிசயம்..!!

Read Next

இரவில் தூங்கும் முன் கிராம்பை மென்று சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular