தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ், தனது பதவி மற்றும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தனிப்பட்ட சில கடினமான அனுபவங்கள் காரணமாக இமுடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 முதல் பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஹிந்தி உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வந்த இவரது விலகல் கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.




