பாதுகாப்பற்ற முறையில் பச்சை குத்துவதால் கல்லீரல் அழற்சி மற்றும் எச்.ஐ.வி போன்ற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளதால், பொதுவாக டேட்டூ குத்தியவர்கள் ரத்த தானம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்காலத்தில் பலரும் ஆர்வம் காட்டுவதை முன்னிட்டு, இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சில முக்கிய தளர்வுகளை வழங்கியுள்ளது. இதன்படி, ஒருவர் பச்சை குத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டு தாராளமாக ரத்த தானம் செய்யலாம்.




