தென்காசி காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் செல்வி, தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நேற்று (ஜூன் 09) அளித்த புகாரில், தென்காசி மத்திய மாவட்ட தவெகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் பெண்களை மதிப்பதே இல்லை என்றும் குற்றம் சாட்டினார். ராபின் என்ற தவறான நபரை வைத்துக்கொண்டு பலரை நீக்கி வருவதாகவும், மகளிருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ள நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.




