பரபரப்பான வாழ்க்கை முறையால் தூக்கமின்மையால் தவிப்பவர்கள், இரவில் கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்வதன் மூலம் மாத்திரைகள் இன்றியே விரைவாகவும் நிம்மதியாகவும் தூங்க முடியும் என்று சியோல் தேசிய பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கால்கள் கதகதப்பாகும்போது ரத்த நாளங்கள் விரிவடைந்து உடலின் வெப்பநிலை குறைவதால், அது தூங்குவதற்கான சமிக்ஞையை மூளைக்கு அனுப்பி இயற்கையான உறக்கத்தைத் தூண்டுகிறது.




