தமிழகம், புதுச்சேரியிலுள்ள 11,721 தபால் நிலையங்களின் சேவைகளை மேம்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள தலைமை தபால்துறை அதிகாரி அலுவலகத்தில் ‘தக் அதாலத்’ வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இச்சேவைகளை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, சென்னை முதன்மை தபால்துறை தலைவர் அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.




