கர்நாடகா மாநிலம் ஹனூரில் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், உயிரிழந்த மூவரின் உடல்களையும் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




