பெங்களூரு அருகே தலிபான் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசபுல் மாலிக் (25) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த அவர், சமூக வலைதளம் மூலம் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ராணுவம் மற்றும் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அசபுல் மாலிக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக அவரது தொடர்புகள் மற்றும் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




