பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்து, மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடையும் வரை காத்திருக்குமாறு அமைச்சர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கோரிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவின்றி நிறைவடைந்தது.
இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி 28-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், போராட்டம் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




