பூட்டிய வீட்டில் தூய்மைப் பணியாளர் சடலம்: பழகிய நபர் கைது!

 

 

திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் லதா (45), பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லதாவுடன் சுமார் 12 ஆண்டுகளாகப் பழகி வந்த முனிவேல் (65) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

விசாரணையில், வயது காரணமாக தங்களது உறவைத் தொடர விரும்பவில்லை என லதா தெரிவித்ததால் முனிவேல் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, லதா தூங்கிக் கொண்டிருந்தபோது அவரைத் தாக்கி கொலை செய்துவிட்டு வீட்டைப் பூட்டிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

டாஸ்மாக் ஊழியர்கள் 28 முதல் வேலைநிறுத்தம்? பேச்சுவார்த்தை தோல்வி!

Read Next

மனைவியின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவிட்ட கணவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular