கருணை உள்ளம் கொண்டவர்கள் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு மற்றும் பிஸ்கட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தெருநாய்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாய்க்கடி சம்பவங்களை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அளவு தடுப்பூசிகள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.




