சட்டப்பேரவையில் பரபரப்பு: “பள்ளி அனுமதிக்கு பணம் வசூலித்தனர்” – அமைச்சர் குற்றச்சாட்டு!

 

 

சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க தன்னை கட்டாயப்படுத்தி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டினார். இதற்கு தாமே சாட்சி என்றும் அவர் தெரிவித்தது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இதனிடையே, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதால், அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும், அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Read Previous

தமிழகத்தில் அரிய வகை கனிமச் சுரங்கம்: 5 நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி?

Read Next

தெருநாய்களுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular