ரூ.22 லட்சம் பண விவகாரத்தில் மனைவி கொலை: கணவர் கைது!

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே, சொத்து விற்ற பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வித்யா (30), தனது நிலத்தை ரூ.22 லட்சத்திற்கு விற்றுவிட்டு அந்தப் பணத்துடன் வேறு ஒருவருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வங்கிக்கு வந்த வித்யாவிடம் கணவர் நாராயணசாமி (39), சொத்து மற்றும் பணத்தை குழந்தைகள் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

 

இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நாராயணசாமி, வித்யாவை கல்லால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேன்கனிக்கோட்டை போலீசார் நாராயணசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தெருநாய்களுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்!

Read Next

ஆபாச புகைப்படங்களைக் கொண்டு மிரட்டல்: இளம்பெண் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular