சென்னையில் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை: ரவுடி கைது!

 

 

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலம் அருகே நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாக மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடி சதீஷ் (36) என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சதீஷை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Read Previous

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை? நியூசிலாந்தில் புதிய மசோதா!

Read Next

முதுகுத்தண்டு ஆரோக்கியத்திற்கு உதவும் ஆப்பிரிக்க கலாச்சார உடற்பயிற்சிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular