நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!

 

 

கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

ஒரு நெல் மூட்டைக்கு ரூ.50 வரை லஞ்சம் கேட்பதாகவும், பணம் வழங்க மறுத்தால் நெல்லை எடை போட அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் வாட்ச்மேனுக்கும் ரூ.500 வரை பணம் கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Read Previous

“விவசாயிகளின் கஷ்டம் எனக்குத் தெரியும்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கம்!

Read Next

உடை குறித்து கங்கனா விமர்சனம்: க்ரித்தி சனோன் கொடுத்த பதிலடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular