நடிகை க்ரித்தி சனோன் விளம்பரம் ஒன்றில் அணிந்திருந்த உடையை குறிப்பிட்டு, நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்தது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க்ரித்தி சனோன் அணிந்திருந்த உடையை விமர்சித்த கங்கனா, “பிகினியுடன் தான் ராக்கி கட்டுவீர்களா?” என கேள்வி எழுப்பியதுடன், அது அருவருப்பானது என்றும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த க்ரித்தி சனோன், “கலாச்சாரமும் பாரம்பரியமும் ஆடை அலங்காரத்தில் இல்லை; அது ஒருவரின் இதயத்தில் உள்ளது” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
இரு நடிகைகளின் கருத்துகளும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களது ரசிகர்கள் இரு தரப்பாகப் பிரிந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.




