BB8 தர்ஷா குப்தா எலிமினேட்..!! 20 நாட்களுக்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆனார். இரண்டாவது வாரம் அர்னவ் எலிமினேட் ஆனார். இந்நிலையில் இந்த வாரம் தர்ஷா குப்தா வெளியேறினார். இவர் மாடலிங் மீது உள்ள ஆர்வத்தினால் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டகிராம்ல் பதிவிட்டு அதன் மூலமாக பிரபலம் ஆனவர்.

இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய செந்தூரபூவே சீரியலில் நடித்தார் இதனை தொடர்ந்து இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார். அதன் பின்னர் குத் விக் கோமாளி சீசன் 2 ல் கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை காண்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றர். இந்த நிகழ்ச்சியில் மூலமாக தான் இவர் மிகவும் பிரபலம் ஆனார். மேலும் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ருத்ரதாண்டவம் என்ற படத்தில் கதநாயகியாக நடித்தார் அதனை தொடர்ந்து சன்னி லியோன் கூட இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற பேய் படத்தில் நடித்தார். இவருக்கு பெரிதளவில் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 8 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் அவருக்கு பெரிதளவில் வரவேற்பு இல்லாத நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற காரணத்தினால் இந்த வாரம் எலிமினேட் ஆகினார். இந்த சீசனில் எலிமினேட் ஆன முதல் பெண் இவர் தான்.இவர் 20 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார். அதற்க்கு ஒரு நாள் ரூபாய் இருபத்தைந்தாயிரம் வைத்து மொத்தமாக இவருக்கு ரூபாய்.5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. என்ற இவரின் சம்பளம் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது.

Read Previous

ரூ.210 முதலீடு செய்தால் முதுமையில் ஓய்வூதியம்..!! சூப்பர் திட்டம் இதோ..!!

Read Next

விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய இயக்குனர் போஸ் வெங்கட்..!! கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular