IND vs BAN 1st Test: 3ம் நாள் முடிவில் பங்களாதேஷ் 357 ரன்கள் பின்னிலை..!! வெற்றியை நோக்கி இந்தியா..!!

IND vs BAN 1st Test 2024: 3ம் நாள் முடிவில் பங்களாதேஷ் 357 ரன்கள் பின்னிலை..!! வெற்றியை நோக்கி இந்தியா..!!

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை குவித்து இருந்தது. இதையடுத்து இன்றைய 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி 287 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். இதையடுத்து இன்றைய நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை குவித்து 357 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இதையடுத்து 4ஆம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

Read Previous

உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி..!! சத்தான வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி?..

Read Next

இணையதளத்தில் பகுதி நேர வேலை என கூறி 21 லட்சம் பணம் மோசடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular