சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. எல் ஐ சி மியூச்சுவல் ஃபண்ட்ல் தினசரி ரூ.100 சேமிக்கும் எஸ்ஐபியை அறிமுகப்படுத்தியுள்ளது. தினசரி SIP கள் வழக்கமான சேமிப்பு மற்றும் முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது.
புதிதாக வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், சிறிய தொகையில் தங்கள் பணத்தை சேமித்து முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள முடியும். சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். தினசரி முதலீடு செய்வதன் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள விரும்புவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.