தொடர்ச்சியாக 3 வருட காலம் PF அக்கவுண்டில் பங்களித்த மெம்பர்கள் தங்களுடைய EPF பேலன்ஸில் இருந்து 90 சதவீத தொகையை வித்டிரா செய்து கொள்ளலாம். முன்னதாக, இது 5 வருடமாக இருந்தது. அது மட்டுமல்லாமல், அட்வான்ஸ் கிளைம் செய்வதற்கான உச்சவரம்பு என்பது 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்கூட்டிய அப்ரூவல் இல்லாமல் பணத்தை விரைவாக வித்டிரா செய்து கொள்ளலாம். இந்த புதிய விதி இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.




