SBI வங்கியில் 2600 காலி பணியிடங்கள்..!! ரூ.85,920 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் (Circle Based Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,600 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சென்னை மண்டலத்திற்கு மட்டும் 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வங்கி பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்:

1. Objective Type தேர்வு – ஆங்கிலம், கணினி அறிவு, வங்கி மற்றும் பொருளாதார அறிவு உள்ளிட்ட பிரிவுகள்

2. Descriptive Type தேர்வு – கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல்

தேர்வு முடிவின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும்.

சம்பளம்: ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு/ஓபிசி/இடபுள்யூஎஸ் பிரிவினர்: ரூ.750

எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் இல்லை

இணையதள முகவரி: https://sbi.co.in/hi/web/careers/current-openings

கடைசி தேதி: மே 29, 2025

Read Previous

வீட்டில் உள்ள முதியவர்கள் இடமும் பேச நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை உணர்த்திய அழகான பதிவு..!! படித்ததில் கண்ணீர் வர வைத்த பதிவு..!!

Read Next

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular