
முகத்தின் நிறம் மாநிறமாக இருந்தாலும், வெள்ளை நிறமாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும், அழகு குறைவதில்லை. ஆனால் முகத்தில் உள்ள சிறிய குறைபாடுகள் கூட அதை அசிங்கமாக காட்டும். குறிப்பாக கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் வருவதை நீங்கள் கவனிக்கும்போது, அவை மேலும் தோன்றுவதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். தற்போது முகத்தில் உள்ள கரும்புள்ளியை தவிர்க்க சில வழிமுறைகளை கீழ் காணலாம்.
அழகான முகத்தில் கரும்புள்ளியை தவிர்க்க டிப்ஸ்:
ஒரு டி ஸ்பூன் உப்பை, ரோஸ் வாட்டருடன் கலந்துகொள்ள வேண்டும்.
அதனை முகத்தில் அப்ளை செய்தபின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி வாரம் ஒரு முறை செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தபின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதுவும் முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாவதைத் தடுக்க உதவும்..