இட்லி மாவினை ஃப்ரிட்ஜில் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்..!!

இட்லி மாவினை ஃப்ரிட்ஜில் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

பல வருடங்களுக்கு முன் தினமும் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து நம் வீடுகளில் இட்லி, தோசை செய்வது வழக்கம். அவ்வாறு செய்வதால் நம் உணவும் ருசியாக இருந்தது, உடலும் ஆரோக்கியமாக இருந்தாது.

ஆனால் இன்றைய நவீன வாழ்க்கையில் தினமும் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து பயன்படுத்துவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஏன் என்றால் அதற்கு நேரமும் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை.

கிரைண்டரில் ஒருமுறை மாவு அரைத்து அதை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறோம். இவ்வாறு செய்வதால் நம் வேலை எளிதாகிறது. அனால் அவ்வாறு நீண்ட நாட்கள் மாவினை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதால் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் ஆய்வுகள் கூறுகிறது.

ஃப்ரிட்ஜில் மாவினை அரைத்து வைத்து பல நாட்கள் உபயோகப்படுத்தும் போது நமக்கு அதில் உள்ள நச்சுக்கள் தெரிவதில்லை. புதிதாக அரைத்த மாவினை போன்றுதான் இருக்கும். ஆனால் நாம் சாப்பிட்டவுடன் உடலில் சென்று உடனே புளித்து விடும். இதனால் பல உபாதைகளுக்கு நாம் ஆளாகிறோம்.

மாவை ஃப்ரிட்ஜில் நீண்ட நாட்கள் வைப்பதால் ஊட்டச்சத்துக்கள் இழப்பு, நொதித்தல், மற்றும் பூஞ்சை வளர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இட்லி மாவு போன்ற புளிக்கவைக்கப்பட்ட மாவுகளை 1-3 நாட்களுக்கு மிகாமல் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இட்லி மாவினை ஃப்ரிட்ஜில் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

மாவு புளிக்கும்போது அதில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. அரைத்த மாவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் வைக்கும்போது, பாக்டீரியாக்கள் பெருகி நச்சுக்களை உருவாக்குகின்றன.

அரைத்த மாவை ஒரே பாத்திரத்தில் வைத்திருக்கும்போது இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

ஃப்ரிட்ஜில் வைப்பதால் மாவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைந்து ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

இட்லி, தோசை மாவில் வெந்தயம் சேர்ப்பது வழக்கம். மூன்று நாட்களுக்கு மேல் மாவு புளிக்கும்போது, அது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இதய நோய் உள்ளவர்களுக்கு இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பழைய மாவை ஜீரணிப்பது உடலுக்கு கடினமாக இருக்கும். இதனால் வாய்வு, வயிற்று எரிச்சல் மற்றும் பிற செரிமானப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. புதிய மாவு செரிமானத்தை எளிதாக்குகிறது.

இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் உள்ள மாவை பயன்படுத்தும்போது, அதுபுளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்கி, அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

மாவைப் பாதுகாக்கும் வழிகள்

மாவை ஒரே பாத்திரத்தில் வைக்காமல், சிறிய அளவிலான இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களில் பிரித்து வைக்கவும். இது பாக்டீரியா வளர்ச்சியை ஓரளவு குறைக்கும்.

மாவை அதிக வெப்பம், வெளிச்சம், அல்லது சூரிய ஒளி படும் இடங்களில் வைக்காதீர்கள்.

தேவைப்படும்போது மட்டும் மாவை எடுத்து, அறையின் வெப்பநிலைக்கு வந்ததும் பயன்படுத்திவிட்டு, மீண்டும் உடனடியாக ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

 

Read Previous

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை..!!

Read Next

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி இருப்பது ஏன்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular