எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை..!!

Oplus_131072

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை

ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சையின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சமயலறையில், பூஜை அறையில், மருத்துவத்துறை போன்ற அனைத்து இடத்திலும் எலுமிச்சையின் பயன்பாடு அதிக அளவில் நிறைந்துள்ளது.

எலுமிச்சை உடலின் உள் பகுதியில் உள்ள நோய்களை குணப்படுத்துவதோடு உடலின் மேல் பகுதியையும் பாதுகாப்பாக வைப்பதில் எலுமிச்சைக்கு நிகர் வேறெதுவும் கிடையாது.

எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. எலுமிச்சையில் வைட்டமின் C மட்டுமல்லாது ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டி வைரல், ஆண்டி பாக்டீரியல் என பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உடலின் pH அளவை சீராக்கி சமநிலைப்படுத்துவதால் சளி மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

எலுமிச்சை நன்மைகள்

1. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை, நீரிழிவு நோயால் அவதிப்படுப‌வர்கள் தினமும் சிறிதளவு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். இவ்வாறு குடித்து வந்தால் வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி போன்றவை குணமடையும்.

2. சிறுநீர் மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய எலுமிச்சை பயன்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது.

3. எலுமிச்சை பழத்தை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் பித்தத்தினால் ஏற்படும் பாதிப்பு குறையும். ஒற்றைத் தலைவலி, வாந்தி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

4. இருமலினால் ஏற்படும் தொண்டை வலியை சரி செய்கிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

5. எலுமிச்சை பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், எலும்பு தேய்மானம் அடையாமல் இருக்கவும் பயன்படுகிறது. எனவே அடிக்கடி எலுமிச்சை சாறு கலந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை பழ சாறினை நேரடியாக அருந்தக்கூடாது. எலுமிச்சை அமிலத்தன்மை நிறைந்த பழம் என்பதால் எப்போது அருந்தினாலும் சிறிதளவு தண்ணீருடன் கலந்து தான் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை மருத்துவ பயன்கள்

1. எலுமிச்சை பழத்தில் நிறைந்துள்ள சிட்ரிக் அமிலம் புற்றுநோய் வராமல் தடுத்து புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கிறது.

2. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் இளைத்து உடல் பொலிவு உண்டாகும்.

3. வாய்துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க தினமும் எலுமிச்சை சாறினை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் ஏற்படாது.

4. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு அஜீரண கோளறு ஏற்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு குடித்தால் விரைவில் ஜீரணம் ஆகும்.

5. எலுமிச்சை உடலுக்கு நன்மை அளிப்பதோடு சருமத்திற்கு நல்ல பொலிவை தருகிறது.

6. எலுமிச்சை பழ சாறினை முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்ச்சுருக்கம்,கரு வளையம் அனைத்தும் மறைந்து விடும்.

7. எலுமிச்சை பழத்தை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலை முடி நன்கு கருமையாகவும், பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும்.

8. எலுமிச்சை உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகப்படுத்தி நோய் வராமல் தடுக்கிறது.

9. எலுமிச்சையில் உள்ள புளிப்பு சுவை நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணம் அடைய செய்து பசியை தூண்ட செய்கிறது.

10. நாம் முகத்திற்கும், தலைக்கும் பயன்படுத்தும் அனைத்து அழகு சாதன பொருட்களிலும் எலுமிச்சை மிக அதிக அளவில் பயன்படுகிறது.

11. படர் தாமரை, பூஞ்சை போன்றவற்றால் நமது தோலில் ஏற்படும் பாதிப்புகளின் மீது, எலுமிச்சம் பழ சாற்றை நன்கு தடவி வருவதால் தோல் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்குகின்றன.

Read Previous

கேழ்வரகின் ஆரோக்கிய நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

இட்லி மாவினை ஃப்ரிட்ஜில் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular