நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போது இருக்கும் நவீன காலத்தில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்ற பொருட்களை நாம் கம்மியாக தான் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இன்று சிறுதானியங்களை நாம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்.
சிறுதானியங்களை நாம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் நமது ஆயுள் நீடிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் தினையை நீங்கள் நிச்சயமாக சாப்பிடலாம். வரகு சாப்பிடும் போது மலச்சிக்கல் மற்றும் உடல் எடை குறைக்க மிகவும் உதவுகிறது.
மேலும் நமது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வரகு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சிறுதானியங்களை சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி நமது உடம்புக்கு கிடைத்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. ஆகையால் இத்தனை நர்குணங்களை உள்ளடக்கிய சிறுதானியங்களை சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் சேர்த்து வைப்போம்.




