நமது உடலின் ஆரோக்கியத்திற்காக சில உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் நமது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க சரியான தீர்வான பச்சைப் பயிரை வைத்து சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயிறு – ஒரு கப்
புளி – நெல்லிக்காய் அளவு
பூண்டு – 2 பல்
தேங்காய் – 2 துண்டு
வரமிளகாய் – 6
சீரகம் – அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க :
வரமிளகாய் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி
செய்முறை :
பச்சை பயிரை நன்கு கழுவி சுத்தம் செய்து நீரில் நான்கு மணி நேரம் ஆவது ஊற வைக்க வேண்டும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து வரமிளகாய் சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆறியதும் ஜாரில் போட்டு பெருங்காயத்தூளுடன் நன்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் ஊறவைத்த பச்சைபயிரை சேர்த்து பூண்டு தேங்காய் புளி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
எலுமிச்சம் பழச்சாறு தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடைசியாக ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு உளுந்தம் பருப்பு கடுகு கருவேப்பிலை வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து சட்னியில் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான பச்சை பயிறு சட்னி தயார்.



