நமது உடலின் ஆரோக்கியத்திற்காக ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது முக்கியமாக கருதப்படுகிறது. அதில் ஒரு சில உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று இருக்கிறது. அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் சரி இரவு நேரத்தில் சாப்பிட்டால் நமக்கு தான் பாதிப்பு ஏற்படும். அவை என்னென்னவென்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை சளியை உருவாக்கும். பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. அப்படி செய்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகப்படுத்தி விடும்.
புரதச்சத்தை கொண்ட உணவுகளை இரவு நேரத்தில் நாம் அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படி செய்தால் ஜீரணமாக நிறைய நேரம் தேவைப்பட்டு தூக்கம் பாதிக்கப்படும். கொழுப்பு சத்து நிறைந்திருக்கும் உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. உலர் பழங்களையும் இரவில் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும்.




