நம் வீடுகளில் அதிகமாக கொசு தொல்லை என்பது அனைவர் வீட்டிலும் பொதுவாகவே காணப்படும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும். இந்த கொசு தொல்லையால் பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த கொசுவால் பல நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற நூல்கள் இந்த கொசுக்களால் தான் பரவுகின்றது என்று கூறப்படுகிறது. அதனால் வீடுகளிலும் சரி வீட்டிற்கு வெளிப்புறங்களிலும் சரி கொசுக்கள் அண்டாமல் சுற்றுப்புறங்களை நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான ஒன்றாகும். வீட்டிற்கு வெளியே உள்ள சுற்றுப்புறங்களை நாம் சுத்தமாக வைத்திருந்தால் கொசுக்கள் அண்டாது. இந்நிலையில், உங்கள் வீட்டில் உள்ள கொசுக்களை போக்க ஒரு அருமையான டிப்ஸ் ஒன்று உள்ளது அதை பற்றி தற்போது பார்க்கலாம்.
எலுமிச்சை யூகலிப்டஸ் என்னை சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகின்றது. இதனை வேறு ஏதாவது கேரியர் எண்ணையுடன் கலந்து நமது சருமத்தில் பூசினால் கொசு நம் பக்கமே வராது. மேலும் நம் கிராமங்களில் கிடைக்கும் எளிதான மாட்டு சாணத்தை வைத்தும் கொசுக்களை விரட்டி அடிக்கலாம். மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலமாக வெளிவரக்கூடிய புகையானது ஈக்கள் மற்றும் கொசுக்கள் போன்ற பிற பூச்சிகளை விரட்டும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்டி அடிக்கலாம்.




