பொதுவாகவே மனிதர்களின் உடம்பில் நடக்கும் விஷயங்களில் ஒன்று வியர்வை. இவை இயல்பான ஒன்றாக இருந்தாலும் அதுவே அதிகமாக வியர்வை வெளியேறினால் உடலில் சில பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அதிலும் குறிப்பாக முகம், நெற்றி, கழுத்து, உள்ளங்கை மற்றும் பாதங்கள் ஆகியவற்றின் வழக்கத்தை விட அதிகமாக வியர்வை வெளியேறினால் அதனை அப்படியே விட்டுவிடுவது ஆபத்தில் முடியும்.
அதற்கான காரணத்தை அறிந்து கொண்டு உரிய சிகிச்சை எடுப்பது அவசியமாகும். கைகள் மற்றும் கால்களில் எப்போதும் வியர்வை இருந்து கொண்டே இருந்தால் வியர்வை சுரப்பிகள் அதிகப்படியாக வியர்வையை தூண்டலாம். இப்படி அதிகப்படியான வியர்வை தூண்டுதல் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வியர்வை அதிகமாக ஏற்படும். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டால் பிரச்சனை ஏற்படும் என்பதால் அதிகமான வியர்வைக்கு சில அன்றாட பழக்க வழக்கங்களை நாம் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது தினமும் இரண்டு முறை குளிப்பதுடன் காட்டன் உடைகளை மட்டுமே அணிய வேண்டும். மன அழுத்தத்தை குறைப்பதும் இதற்கு தீர்வாகும்.
இதுபோன்று உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் சுரக்கும் அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்த ஓரெளிய வழி உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிச்சாறு, தேன் ஆகிய மூன்றையும் சம அளவாக எடுத்து கலந்து 1 தேக்கரண் டியளவு (5மில்லி) தினமும் 2வேளை குடித்து வர உடல் சூடு தணியும். இதனால் அதிகப்படியான வியர்வை கட்டுப்படும். ஒருவேளை இதுவும் பலனளிக்காமல் சென்றால் நீங்கள் மருத்துவரிடம் காண்பித்து வியர்வைக்கு காரணத்தை பரிசோதனை மூலமாக தெரிந்து கொண்டு அதற்கான சிகிச்சை எடுப்பது நல்லது.