
காசு, பணமெல்லாம் அப்பறம் பாசம் தான் முதலில் என்று நினைப்பவன்(அதெல்லாம் எத்தனை கிலோன்னு இப்போலாம் கேக்கறாங்க!)
அவளின் விருப்பத்திற்கு தடை சொல்லாத ஒருவன்.
அவள் சாதிக்க நினைப்பதை பின் நின்று ஊக்கப்படுத்தும் ஒருவன்.
டீ டோட்டலர்( அதெல்லாம் டைனோஸர் காலத்துலேயே அழிஞ்சிடுச்சுல. மறந்துட்டேன்.)
நம்முடைய பெற்றோரையும் அவனுடைய பெற்றோர் போல மரியாதையாக நடத்துபவன்.
தன்னுடைய குடும்பத்தை முதன்மையாக கருதும் ஒருவன்.
மனைவியை இன்னொரு அம்மா போல பாவிப்பவன்.
காய்கறி வாங்க அனுப்பினால் கருவேப்பிலையும் சேர்த்து வாங்கி வருபவன். ஹிஹி.
“வீட்டுக்கு பத்திரமா போய் சேர்ந்துட்டியாம்மா?” என்று அக்கறையாக விசாரிக்கும் ஒருவன்.
உடம்பு சரியில்லை என்று சொன்னால் அரவணைத்து பார்த்து கொள்ளும் ஒருவன்.
காலையில் அவன் முதலில் எழுந்தால் பெட் காபி போட்டு மனைவியை எழுப்பும் அளவிற்கு ஈகோ இல்லாத ஒருவன்.
குழந்தைகள் பிறந்தாலும் மனைவியை கொஞ்ச மறக்காத மணவாளன்.
சாலையை கடக்கும் போது கை பிடித்து அழைத்து செல்பவன்.
அவள் மன எண்ணத்தை முகத்தை பார்த்தே புரிந்து கொள்ளும் ஒருவன்.
“நீ சாப்பிட்டியா?” என்று அக்கறையாக விசாரிக்கும் ஒருவன்.
தன்னை நம்பி வந்தவளை எந்த சமையத்திலும் கை விடாத ஒருவன்.