
ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் கண்டிப்பாக இருக்க வேண்டிய 10 வகை மரங்கள் இவைதான்..!!
மரங்கள் வளர்ப்பது என்பது மிகவும் நல்ல விஷயம். ஏனென்றால் வீடு பக்கத்தில் மரங்களை வளர்ப்பதால் நாம் ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க முடியும். ஆரோக்கியமான காற்றை சுவாசிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்நிலையில் வீட்டைச் சுற்றி இருக்க வேண்டிய 10 வகையான மரங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வீட்டுக்கு முன் வேப்பமரம் இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருப்பது நல்லது. பப்பாளி மரம் வீட்டுக்கு வெளியே தான் இருக்க வேண்டும். மற்றும் குளிக்கும் மற்றும் துணி துவைக்கும் இடத்தில் வாழைமரம் இருப்பது நல்லது. பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும். மற்றும் அதன் நிழலின் கீழ்ப்பகுதியில் கருவேப்பிலை செடி இருப்பது நல்லது. வீட்டுக்கு ஒரு நெல்லி செடி இருக்க வேண்டும். அதேபோல் வீட்டுக்கு ஒரு எலுமிச்சை மரமும் மிகவும் அவசியமான ஒன்று. ஒரு மாமரம் வீட்டில் இருப்பது அத்தனை ஆன்மீக பலன்களையும் தரும். வீட்டுக்கு வெளியே வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இவ்வாறு மரங்கள் வீட்டைச் சுற்றி இருந்தால் ஒருவர் கூட பசியோடு தூங்க மாட்டார்கள்.