நமது மனைவியை கட்டிப்பிடித்து தூங்குவதால் பல நன்மைகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கணவன் மனைவி கட்டி பிடித்து தூங்குவதால் நமது உடலில் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் வெளியேறி, கணவன்-மனைவி ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கணவன் மனைவி இருவரும் இரவு முழுவதும் கட்டி பிடித்து தூங்குவதால் மன அமைதியுடன் எந்தவித துக்கமுமின்றி தூங்குகிறார்கள் என கூறுகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு கட்டி பிடித்து தூங்கினால் தூக்கமே வராது என கூறுகின்றனர். ஆனால் கட்டி பிடித்து தூங்கினால் தூக்கத்தில் எந்தவித பிரச்சினையும் வராது என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சிறிய மனக்கசப்பும் கட்டி பிடித்து தூங்கும் போது காணாமல் போய்விடும், மனதை ரிலாக்ஸ் ஆக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மேலும் கட்டி பிடித்துக்கொண்டு சிறிது பேசும்போது நல்ல புரிதல்கள் ஏற்பட்டு எந்தவித சண்டைகளும் வராமல் இருக்கும் என கூறப்படுகிறது.