
கரம் மசாலாவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று கரம் மசாலா. இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கரம் மசாலாவை நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும் அதை குறித்து பார்க்கலாம்.
கரம் மசாலா பொடி செய்ய ஏலக்காய், கருப்பு மிளகு ,பட்டை, சீரகம், பிரியாணி இலை சேர்த்து ஒரு கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை பொடியாக அரைத்து எடுத்துக் கொண்டால் கரம் மசாலா ரெடி.இப்படி வீட்டிலேயே நாம் கரம் மசாலா செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு நன்மைகளையும் கொடுக்கிறது வாங்க பார்க்கலாம்.
கரம் மசாலா இதயத்திற்கு நன்மையை கொடுப்பது மட்டுமில்லாமல் இரத்த அழுத்த அளவை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கவும் புற்றுநோய் கட்டி ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் ரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு கரம் மசாலா உடல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது.குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
எனவே பல மருத்துவ குணங்கள் நிறைந்த கரம் மசாலாவை நம் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.