
தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா..??
கற்றாழை ஜூஸ் இது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலர்தான் குடித்திருப்போம். ஒரு சிலர் என்னது கற்றாழையில் ஜூஸா எனக்கு வேணாம்பா அது கசக்கும் என்று குடிக்காமலேயே அதன் சுவையை கூறி இருப்போம். இந்த சம்பவத்தை நம்மில் பலரும் செய்திருப்போம். இந்நிலையில் கற்றாழை ஜூஸின் நன்மைகள் ஏராளம். என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் கற்றாழை ஜூசை குடித்த வர அந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி உடல் சம்பந்தமான பல பிரச்சனைகள் கற்றலை ஜூஸ் குடிப்பதால் சரியாகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கற்றாழை ஜூஸில் லெமன் பிழிந்து லெமன் ஜூஸ் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். அது மட்டும் இன்றி மலச்சிக்கல் உள்ளோர்க்கு இது மிகச்சிறந்த மருந்தாக இருக்கும்.இந்த ஜூஸில் இருக்கும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி பித்தநீர் உற்பத்தியை தூண்டி செரிமானத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அமைகிறது. லெமன் கலந்த கற்றாழை ஜூசை குடித்து வருவதன் மூலம் அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் உடல் வறண்டு போகாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. அது மட்டும் இன்றி நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இந்த லெமன் கலந்த கற்றாழை ஜூசை குடிப்பதன் மூலம் இது கல்லீரலை சுத்தப்படுத்தி உடலில் இருந்து பல நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மற்றும் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட இந்த லெமன் கலந்த கற்றாழை ஜூசை குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.