இடியாப்பம் இனி இப்படி செஞ்சு பாருங்க..!! அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!
இடியாப்பம் என்பது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இருப்பினும் இடியாப்பத்தை மிக சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இட்லி அரிசி ₹500 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் தேங்காய் துருவல் இரண்டு கப் எடுத்துக் கொள்ளுங்கள் நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள் உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து பிறகு ஒரு மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் சிறிது உப்பு சேர்த்து மாவு பதத்துக்கு கெட்டியாக கரைக்கவும் அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும் வானலியில் நல்லெண்ணெய் விட்டு கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும் மாவு லேசாக வெந்ததும் நன்கு பிசையவும் மாவை சிறிய பந்துகளாக உருட்டி அகலமான இட்லி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உருண்டைகளை போடவும் வெந்ததும் எடுத்து இடியாப்ப அச்சில் பிழியவும். இதற்கு தேங்காய் பால் செமையான சைடிஸ் ஆக இருக்கும். அவ்வளவுதான் சுவையான இடியாப்பம் ரெடி. நீங்களும் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.




