
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எவ்வாறு சரி செய்வது..??
பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறது. ஆனால் பல பெற்றோர்களுக்கு இது தெரிவதே இல்லை. குழந்தைகள் மலம் கழிக்கும் போது சிரமப்பட்டால் பெற்றோர்களை அதை கவனமாக பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை அடிக்கடி வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது பிற்காலத்தில் பெரிய பிரச்சினையாக கூட மாறலாம். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாக பால் கிடைக்காததன் அறிகுறியாக கூட இருக்கலாம். அதுமட்டுமின்றி தாய்ப்பால் இல்லாமல் மாட்டுப்பால் மற்றும் பவுடர் பால் கொடுப்பது கூட இந்த மலச்சிக்கலுக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். ஒன்பது மாதம் ஆண் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் போது சிறிது சுடுநீர் கொடுக்க வேண்டும். மேலும் இடுப்பு அதிகம் அசையும் படியான விளையாட்டுகளை மற்றும் ஓடி ஆடி விளையாடு வதற்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். தினமும் குடிநீரை காய்ச்சும் பொழுது சுக்கை தட்டி போடுவதன் மூலம் அந்த தண்ணீரை குடிப்பதன் மூலமும் மலச்சிக்கலை சரி செய்யலாம். மற்றும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வந்தால் இரவில் வாழைப்பழம் கொடுத்து சாப்பிட கொடுங்கள். காலையில் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மலம் கழிப்பார்கள்.