‘ஜன நாயகன்’ திரைப்பட விவகாரத்தில் தணிக்கை வாரியத்தின் செயல்பாடு சரியே என்று நடிகரும், தணிக்கை வாரிய முன்னாள் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், தணிக்கை சான்றிதழ் வாங்காமல் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கக்கூடாது. சட்டவிதிகளின்படிதான் தணிக்கை வாரியம் செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார். இப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களை காட்டி சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.




