
சிறுநீரக கல் பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
சிறுநீரக கல் பிரச்சனை உண்டாகும் பட்சத்தில் அதிகமான அளவு முதுகு வலி மற்றும் பின்பக்க விலா எலும்பில் அதிகப்படியான வலி ஏற்படும். மற்றும் சிறுநீர் கழிக்க முயற்சிக்கையில் சிறுநீர் குழாயில் கற்கள் உராய்வினை ஏற்படுத்தி எரிச்சலை உண்டாக்கும். சிறுநீரக பாதையில் இந்த கற்கள் இருக்கும் பொழுது உண்டாகும் அழுத்தம் அதிகப்படியான வலியை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கையில் ரத்தம் சேர்ந்து வெளியேறுகிறது என்றாலும் நமக்கு சிறுநீர் கல் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் ஆனது வெளியேறும் போது சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் கண்டிப்பாக இதை கவனித்து பாருங்கள். மற்றும் சிறுநீரில் அளவுக்கு அதிகமான துர்நாற்றம் ஏற்பட்டாலும் நமக்கு அந்த பிரச்சனை வந்துவிட்டது என்று அர்த்தம். குமட்டல் மற்றும் வாந்தி வருவது இயல்பான விஷயம் என்று நினைக்கலாம். ஆனால் சிறுநீரகம் மற்றும் இரைப்பைக்கு இடையே உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்படுவதாலும் கூட கூப்பிட்டால் மற்றும் வாந்தி போன்றவர்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. சிறுநீரில் கற்கள் அடைப்பதால் சில சமயங்களில் சிறுநீரகப் பாதை முடிச்சுகள் உண்டாகக்கூட அதிகமான அளவு வாய்ப்புகள் இருக்கிறது இதனால் அதிகமான வலி ஏற்பட்டு சிரமப்படுவோம். சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் வழக்கமாக சிறுநீர் கழிப்பதை விட அதிகமான அளவு சிறுநீர் கழிப்பதற்கு அடிக்கடி கழிவறைக்கு செல்வார்கள். இதுதான் சிறுநீரக கல் பிரச்சனையில் அறிகுறிகள் இதனை தெரிந்து கொள்ளுங்கள்.