தண்ணீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?..

பாதாம் என்றாலே அதில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிடும் பொழுது நன்மைகள் இன்னும் பல மடங்கு கிடைக்கின்றது.

இதில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. தினமும் தவறாமல் ஊறவைத்த பாதாமை வெறும் 5 எடுத்துக்கொண்டால் போதுமானது.

பாதாமை ஊறவைத்து எடுத்து கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும். இதை சாப்பிடுவதால் சருமம் மற்றும் உடல் இரண்டிற்குமே நன்மை கொடுக்கும்.

பாதாமில் உள்ள நன்மைகள்:-

தினமும் தவறாமல் ஊற வைத்த பாதாமை எடுத்து கொண்டால் மலசிக்கல், செரிமான பிரச்னை, அஜீரணம், வீக்கம், தசைப்பிடிப்பு போன்றவையில் இருந்து உடனடியாக நிவாரணம் பெறலாம்.

பாதாமை ஊறவைப்பதால் அதில் ஃபோலிக் அமிலம் உண்டாகிறது. கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் ஃபோலிக் அமிலம் நிறைவாக தேவை. இது கருவின் நரம்பு குழாய் குறைபாடுகளை தடுக்க உதவும் முக்கியமான சத்து ஆகும். ஆதலால் பாதாம் எடுத்து கொள்வதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும்.

வெறும் பாதாமை சாப்பிடுவதும் ஒரு வகை ஆரோக்கியம் தான். அனால் அப்படி செய்தால் உடல் எடை அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஆனால் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடல் எடையை கூட்டாமல் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகின்றது.

பாதாமில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. இது உடலில் உள்ள மற்ற கொழுப்புகளை சமநிலையில் வைத்து கொண்டு இதய நோய், பக்கவாதம் போன்றவையில் இருந்து பாதுகாக்கிறது.

Read Previous

பெண்களுக்கு கருப்பை சுத்தமாக இருக்க வீட்டு வைத்தியம்..!!

Read Next

தமிழக அரசில் 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை..!! சம்பளம்:ரூ.40,000/-..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular