பாஜக திமுக தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்பதில் தொடங்கி விஜயின் வருகையை எவ்வாறு அணுகுவது என்பது வரை பல்வேறு விஷயங்கள் இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது…
பொதுக்குழுக்கு முன்பாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய துரித செயல்பாடுகளுக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று நடைபெற்றது, இந்த கூட்டத்துக்கு பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது அந்த வகையில் மொத்தம் உள்ள 82 மாவட்ட செயலாளர்களின் 81 பேர் கலந்து கொண்டனர், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படி எதிர்கொள்வது உட்கட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது, புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜயுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன, ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் விவரம் அறிந்த கட்சி நிர்வாகிகள்…!!




