பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்து இயக்குவது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் விடுவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது..
தீபாவளி சாத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் 5925 சிறப்பு ரயில்கள் விடப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார், 108 ரயில்கள் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில் 2,500 பெட்டிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த ரயில்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார், மேலும் அடுத்த மாதம் தீபாவளி வர இருப்பதால் 20 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார், மேலும் பண்டிகை காலங்களில் கூட்டங்கள் நெரிசலை தவிர்ப்பதற்கு இந்த முறை 2500 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதன் மூலம் பயணிகள் மகிழ்ச்சியாக தங்களின் சொந்த ஊருக்கு சென்று வர முடியும்..!!




