தமிழகத்தில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகின்ற நிலையில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது…
இன்று ஏழு மாவட்டங்களுக்கு கனமழை இருப்பதாக தெரிவித்துள்ளது சென்னை வானிலை மையம், உள் தமிழகப் பகுதியில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக இன்று செப்டம்பர் 27ஆம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, இதில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காந்திபுரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரத்தில், தொடர்ந்து ஏழு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய இடங்களில் மிதமான மழை மற்றும் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சென்னை வானிலை மையும் அறிவித்துள்ளது..!!




